" கேப்டனை இப்பிடி கஷ்டபடுத்தாதீங்க" அட்வைஸ் கூறிய இயக்குனர் பாண்டிராஜுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்.!
கேப்டனை இப்பிடி கஷ்டபடுத்தாதீங்க அட்வைஸ் கூறிய இயக்குனர் பாண்டிராஜுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்.!
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
இதையடுத்து கடந்த வாரம் திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்தும் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் சரிந்து விழாப்போன நிலையில், தொண்டர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் மனம் வருந்தி கருத்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் பாண்டிராஜ், "கேப்டன் பூரண குணமடையும் வரை அவரை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள். ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது" என்று கூறியிருந்தார். இதுகுறித்து பிரேமலதா, "கேப்டனுக்கு நடந்த துரோகம் தான் அவர் உடல்நிலை சரிய காரணம்.
பலரும் அவரின் உடல்நிலை குறித்து என்னென்னவோ கருத்துகள். ஒரு மனைவியாய் எனக்கு அது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அவர் கட்சி வேட்டியில் வந்து உட்கார்ந்தாரே? இது சினிமா இல்லை. கட்சி. உங்கள் அட்வைசுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.