நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து, அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தேமுதிக கட்சியினர்!
Premalatha vijaykanth covid 19 positive
தேமுதிக கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே நடைபெற்ற பரிசோதனையில் விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது .இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தேமுதிக கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.