தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் ரீ-ரிலீஸாகும் பிரேமம் திரைப்படம்? எப்போது தெரியுமா?

மீண்டும் ரீ-ரிலீஸாகும் பிரேமம் திரைப்படம்? எப்போது தெரியுமா?

Premam movie re release on February 1 Advertisement

மலையாள சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Premam re release

இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய நடிகைகள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடித்த பிறகுதான் சாய் பல்லவி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படத்தின் வெற்றிக்கு பின்னணி இசை மற்றும் அனைத்து பாடல்களும் பக்கபலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த படத்திற்கு ராஜேஷ் முருகன் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரேமம் திரைப்படத்தை நினைவுபடுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரேமம் பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Premam re release #Premam #nivin pauly #malar teacher #Sai pallavi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story