ஊடக நண்பர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்த நடிகர் விஜய்! எதற்காக தெரியுமா?
press meeting actor vijay chennai
சர்க்கார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இளையதளபதி விஜய் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்க நாணயம் பரிசளித்துள்ளார்.
சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியுடன் இணைந்து தொடர்ந்த மூன்றாவது முறையாக தனது 63வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்து வெளியான படம் சர்க்கார். வெளிவந்த சமயத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்து இவ்வாண்டில் வெளியான படங்களிலேயே அதிகமான வசூலைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது பத்திரிக்கையாளர்கள் என்று கூறலாம். இந்நிலையில் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர்களுக்கு சிறப்பு விருந்தளித்து தங்க நாணயம் ஒன்றை பரிசளித்துள்ளார். மேலும் அவர் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார்.