அம்மா... லாக்டவுன் முடிஞ்சிருச்சா..! அப்பா இன்னைக்கு வந்திருவாரா..? அப்பாவை தேடி தவிக்கும் மகள்..! பிரிதிவிராஜ் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு.!
Prithiviraj wife sad Instagram post
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரிதிவிராஜ். அன்வர் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பெயர் சொல்லும் அளவிற்கு பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சில வருடங்களாக தமிழில் இவருக்கு பெரிதாக எந்த படமும் வெளிவரவில்லை. ஆனால், மலையாளத்தில் மிகவும் பிசியாக உள்ளார் பிரித்விராஜ். நடிப்பையும் தாண்டி, லூசிபர் என்ற மலையாள படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் பிரிதிவிராஜ் தற்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கையே சிக்கிக்கொண்டார். ஊரடங்கு காரணமாக பாலைவனத்தில் சிக்கி தவிப்பதாகவும், சரியான சாப்பாடு கூட இல்லை எனவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் பிரிதிவிராஜ்.
இதனிடையே தனது கணவனை பிரிந்து அவரது மனைவியும், தந்தையை பிரிந்து அவரது மகளும் மிகுந்த வருத்தத்தில் உள்ளன்னர். இந்நிலையில், நடிகர் ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், என் பொண்ணு தினமும் என்கிட்ட அம்மா லாக்டவுண் முடிஞ்சிருச்சா..?அப்பா இன்னைக்கு வந்துருவாரா என தன்னிடம் தினமும் கேட்பதாக கூறியுள்ளார். மேலும், நானும், என் மகளும் தனது கணவரைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறோம் என அந்த பதிவில் கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் ப்ரித்விராஜ் பத்திரமாக வீடுதிரும்புவார் என ஆறுதல் சொல்லிவருகின்றனர்.