"இது சிறந்த அனுபவம்" காதலர் வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக்கொண்டேன் - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன்டாக்..!!
இது சிறந்த அனுபவம் காதலர் வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக்கொண்டேன் - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன்டாக்..!!
தமிழ் சினிமாவில் "மேயாதமான்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இப்படத்தில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கட்டியிழுத்த இவர், பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓமனப்பெண்ணே போன்ற பல படங்களிலும் நடித்தார்.
மேலும், தனக்கேற்ற கதையை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தற்போது பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரிப் சென்றிருக்கும் நிலையில், பெல்ஜியம், ஜெர்மனி போன்ற பல நாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரது காதலர் வற்புறுத்தியதால் ப்ரியா ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய ஒப்புக்கொண்டார். முதலில் பயமாக இருந்தாலும் இறுதியில் தரையிறங்கிய பின் "இது சிறந்த அனுபவம்" என்று வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் உயிருக்கு ஏதேனும் ஆச்சுன்னா அவ்ளோதான் என கொந்தளித்து வருகின்றனர்.