அட.. வேற லெவல்.! மாஸ் காட்டும் பிரியா பவானி சங்கர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா??
அட.. வேற லெவல்.! மாஸ் காட்டும் பிரியா பவானி சங்கர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா??
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி தற்போது பெரும் பிரபலமாக வலம் வருபவர்கள் ஏராளம். அவ்வாறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். அவரது நடிப்பில் வெளிவந்த குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் பிரியா பவானி சங்கர் நடித்த அகிலன், பொம்மை, ருத்ரன் போன்ற படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அவர் பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு ஏராளமான திரைப்படங்களை தன் வசம் கொண்டு ரசிகர்களை கவர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் தெலுங்கு சினிமாவிலும் கால்பதிக்க உள்ளார்.
அதாவது அவர் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சத்யதேவ் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.