திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..! ஓபனாக பேசிய பிரியா பவானி சங்கர்..!
திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..! ஓபனாக பேசிய பிரியா பவானி சங்கர்..!
தனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு படவாய்ப்புகள் தான் காரணம் என சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் கோலிவுட் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அதன்பிறகு பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இதனைத்தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக அவரது நடிப்பு திறமையை மக்களுக்கு காட்டி கோலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இவர் ராஜவேல் என்ற ஒருவரை காதலித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் குறிப்பு ஓபனாக கூறியுள்ளார்.
அதில், "தான் கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பது தான் எண்ணமாக இருந்தது என்றும், எனக்கு செய்தியாளர், சீரியல் மற்றும் படவாய்ப்புகள் அடுத்தடுத்து தானாக அமைந்த காரணத்தால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.