குடும்பத்தோடு ப்ரியங்கா சோப்ரா செய்த காரியத்தால், கழுவி ஊற்றும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்!!
priyanga chopra smoking photo viral

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை மியாமியில் சொகுசுக் கப்பல் ஒன்றில் கொண்டாடினார். அவருடன் அவரது கணவர் நிக் ஜோனஸ், தாய் மது சோப்ரா, தங்கை பிரநிதி சோப்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரியங்கா சிகரெட் பிடிக்க, அவரது கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.