அடக்கொடுமையே! என்னமா டிரஸ் இது.! வைரலாகும் புகைப்படத்தால் ப்ரியங்கா சோப்ராவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!
PRIYANGA CHOPTA GLAMOUR PHOTO VIRAL
2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற அவர் அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். மேலும் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ப்ரியங்கா சோப்ரா கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
மேலும் எப்போதும் வித்தியாசமான உடைகளையே அணியும் ப்ரியங்கா சோப்ரா அப்புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் அவர் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்காக மிகவும் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் என்ன டிரஸ் இது மோசமாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.