அடேங்கப்பா.. சும்மா கலக்குறாரே! பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் டான் நடிகை! யாருன்னு பார்த்தீங்களா!!
அடேங்கப்பா.. சும்மா கலக்குறாரே! பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் டான் நடிகை! யாருன்னு பார்த்தீங்களா!!
தெலுங்கில் கேங் லீடர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து அவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் முதல் படத்திலேயே பிரியங்கா மோகனின் நடிப்பு பலராலும் பாராட்டபட்டது. அவருக்கென ரசிகர்களும் உருவாகினர். அதனை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டான் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திலும் தனுஷ்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.