சூப்பர் சிங்கரில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம்! கண்கலங்கி அழுத போட்டியாளர்! நெகிழ்ச்சி வீடியோ!!
சூப்பர் சிங்கரில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம்! கண்கலங்கி அழுத போட்டியாளர்! நெகிழ்ச்சி வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. யார் எவ்வளவு கலாய்த்தாலும் அதனை ஜாலியாக எடுத்துகொண்டு கலகலப்பாக தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களையும் பிரியங்காவே தொகுத்து வழங்கி வந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரியங்கா விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திறமையாக விளையாடினாலும் ஒருசில செயல்களால் அவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதற்கிடையில் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மைனா நந்தினி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா கெஸ்ட்டாக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரைக் கண்டதும் போட்டியாளர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெகிழ்ச்சிகரமான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.