ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிரியங்கா சோப்ரா! புகைப்படம்!
Priyanka chopra met gala funny costume photo
உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். ஹிந்தியில் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்தில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா சோப்ரா. இவர்களது திருமணத்திற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும், திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என கூறப்பட்டது.
இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடை மற்றும் மேக்கப், ஹேர்ஸைடல் ரசிகர்களால் செம்மையாக கலாய்த்து வரப்படுகின்றது. அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.