பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த திருமண நகையின் விலை இத்தனை கோடியா? அடேங்கப்பா!
Priyanka chopra wedding ring price and details
இந்திய சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா தற்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்நிலையில் இவர் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவர்களது bridal shower விழா தற்போது நடந்துள்ளது. அதில் அவர் அணிந்து வந்த நகைகள் விலையை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும். அந்த அளவிற்கு அதன் விலைமதிப்பு மிகவும் அதிகம்.
கழுத்தில் 7.5 கோடி ருபாய் மதிப்புள்ள Tiffany & Co. நகை மற்றும் கையில் 2.1 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரம் ஆகியவற்றை அவர் அணிந்துள்ளார்.
உடையின் விலையை சேர்த்தால் மொத்தம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வரும். இந்த தகவல் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.