ஏமாற்றிவிட்டார்...கமல் மீது பரபரப்பு புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர் !! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!
producer complain on kamal
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் உத்தம வில்லன். அப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதனை சமாளிக்க கமல், தன்னிடமிருந்து 10 கோடி ரூபாய் வாங்கியதாகவும் அதனை திருப்பி கொடுக்கவில்லை எனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் உருவான உத்தமவில்லன் திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கமல், தம்மை அணுகி, தமது ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் இயக்கி, நடித்துக் கொடுப்பதாகவும் மேலும் அதில் நடிப்பதற்கு முன்பணமாக 10 கோடி ரூபாயை கொடுங்கள் என கேட்டு பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தன்னிடமிருந்து பணம்பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், பணத்தை திருப்பித் தரவில்லை எனவும் இதுவரை அவர் தனது படத்தில் நடிக்க முன் வரவில்லை என்றும், ஞானவேல்ராஜா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்று கொண்ட தயாரிப்பாளர் சங்கம் கமலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் ஞானவேல் ராஜாவிற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.