#Breaking : பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!
#Breaking : பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபலமான கோலிவுட் பட தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி கடுமையான உடல் நலக்குறைவுக்கு ஆளாகினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் தனது 76 வயதில் உயிரிழந்தார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இவர் நடிகர் ரஜினிகாந்தின் கர்ஜனை மற்றும் காளி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றார். மேலும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமான சுயம்வரம் எனும் திரைப்படத்தை இவர்தான் தயாரித்தார்.
இந்த படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டதால் கின்னஸ் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.