அடேங்கப்பா.. இவ்வளவா!! குக் வித் கோமாளி மணிமேகலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!
அடேங்கப்பா.. இவ்வளவா!! குக் வித் கோமாளி மணிமேகலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!
துவக்க காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் மணிமேகலை. தனது கலகலப்பான பேச்சால், சிரிப்பால் அவர் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். பின்னர் மணிமேகலை கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் விஜய் டிவியில் களமிறங்கிய அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டுள்ளார். மேலும் தனது சேட்டையால், கலகலப்பான செயல்களால் கலக்கி வருகிறார். மேலும் மணிமேகலை சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி அவர் பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 7.82 கோடி முதல் 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.