மணிமேகலை இதனால்தான் குக் வித் கோமாளி ஷோவிலிருந்து விலகினாரா?? காட்டமாக உண்மையை உடைத்த புகழ்!!
மணிமேகலை இதனால்தான் குக் வித் கோமாளி ஷோவிலிருந்து விலகினாரா?? காட்டமாக உண்மையை உடைத்த புகழ்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக கலந்து கொண்டு, எத்தகைய கெட்டப் கொடுத்தாலும் அதனை அசால்டாக மிக சிறப்பாக செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெருமளவில் கவர்ந்தவர் மணிமேகலை. அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து விலகியதாகவும், விஜய் டிவி தரப்பினருடன் பிரச்சினை எனவும் பல காரணங்கள் பரவி வந்தது. இதற்கிடையில் மணிமேகலை இரு தினங்களுக்கு முன்பு சூட்டிங் டைம் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவர் ஏதோ திரைப்படத்திலோ அல்லது யூடியூப் சேனலிலோ பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் குக் வித் கோமாளி புகழிடம் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாரா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நிகழ்ச்சியை விட்டு விலகியது அவரது தனிப்பட்ட சொந்த விஷயம. மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ப்ளீஸ் உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்ப வேண்டாம்.
ஒருவேளை மணிமேகலை கர்ப்பமாக இருந்தால் அது எனக்கு ரொம்ப சந்தோசம். மணிமேகலை அவரது தனிப்பட்ட வேலைக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கலாம் என கூறியுள்ளார்.