புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி வரும் நிலையில், உலகளவில் 2 நாட்களில் ரூ.400 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதனிடையே, புளூ சட்டை மாறனின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
அந்த விமர்சனத்தில், "புஷ்பா படை, பணம் என பலத்துடன் இருக்கிறார். வில்லன் பகத் பாசில் கோபத்துடன் இருக்கிறார். ஹீரோ சி.எம்-ஐ சந்திக்கச் சென்றபோது, புகைப்படம் எடுக்கும் போது தகராறு உண்டாகிறது. அவமானத்தில், சி.எம்-ஐ மாற்ற வேண்டும் என நினைக்கிறார். புறாவுக்கு போறா? இது அக்கப்போரா? என எண்ணம் எழுகிறது.
முதல் படமே பக்கா தெலுங்கு படமாக இருக்கும். இரண்டாவதிலாவது அதனை மாற்றுவார்கள் என எதிர்பார்த்தால், அதுவும் இல்லை. மாஸ் மசாலா படங்களின் கலவையே புஷ்பா. இரண்டாவது பாகமும் அப்படியே.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. வெளியீடுக்கு முன்பே ரூ.100 கோடி வசூல் செய்த புஷ்பா 2; மாபெரும் சாதனை.!
ஜப்பான் காரர் தமிழில் பேசுகிறார், தமிழர் ஜப்பானிஷ் பேசுகிறார். இந்த விஷயம் புதிதாக உள்ளது. இந்த சீனுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை. முதல் 15 நிமிடங்கள் தவிர்த்து, பிற காட்சிகள் நன்றாகவே இருந்தது. ஈகோ பிரச்சனை, இன்ட்ரவல் என பல காட்சிகள் நன்றாக இருந்தது.
இரண்டாவது பகுதி ஒவ்வொரு சீனும் நீளமாக இருந்ததால், அவை சொதப்பியது. கடத்தல், கோவில் ஆட்டம், சென்டிமென்ட், சண்டை என வருகிறது. பகத் பாசில் சண்டை எங்கு முடியும் என எதிர்பார்த்தால், 20 நிமிடம் எம்.ஜி.ஆர் கால சென்டிமென்ட் என வருகிறது. புஷ்பாவுக்கு இது தேவை இல்லை. குடும்ப சென்டிமென்ட் காரணமாக படம் அழுகாச்சியாக இருக்கிறது.
மொத்த படத்தையும் தாங்கித்தாங்கி சாய்ந்து இருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக இவர்கள் நல்ல முறையில் படத்தை எடுத்துள்ளனர். தமிழ் படம் என்றால் படத்தை நடிகர், நடிகை உட்பட பலருக்கு படத்தை செலவு செய்து எஞ்சியது தொழில்நுட்பம் என வரும். முதல் பாகத்தில் பாட்டு பலமாக இருந்தது. இரண்டாவது படத்தில் பாடல் சரியில்லை.
முதல் பாகம் எதற்கு ஓடியது என தெரியவில்லை. அதில் பில்டப் மட்டும் இருந்தது. புஷ்பா என்றால் பயர், வைல்ட் பயர், இண்டெர்நேஷல் என பில்டப் தான். படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் என இருந்தது. இரண்டாவது பாகத்தில் முதல் பகுதி நன்றாக இருந்ததால், பெரிய அளவிலான பிரச்சனை ஏதும் உடலில் தெரியவில்லை. எனினும் படம் பார்ப்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: Peelings Song: புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற 'பீலிங்ஸ்' பாடல் வெளியீடு... லிங்க் உள்ளே.!