புஷ்பா 2; ஒருநாள் சண்டை காட்சிக்கு மட்டும் இவ்வளவு செலவா?? கேட்டா செம ஷாக்காகிருவீங்க!!
புஷ்பா 2; ஒருநாள் சண்டை காட்சிக்கு மட்டும் இவ்வளவு செலவா?? கேட்டா செம ஷாக்காகிருவீங்க!!
அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் புஷ்பா. இப்படம் 500 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடிக்கும் பகத் பாசிலுக்கான சூட்டிங் முடிந்து விட்டதாம். மேலும் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சண்டை காட்சிகளுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ. 80 லட்சம் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.