அச்சச்சோ.. விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்; மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி..!
படப்பிடிப்பில் காயமடைந்த புஷ்பா 2 படக்குழுவினர்; மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் தயாராகி வருகிறது.
புஷ்பா 2ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் விபத்தில் சிக்கினர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.