ஜெயலலிதாவின் வியக்கவைக்கும் வரலாற்றை பேசும் குயின்! மிரட்டலாக வெளிவந்த டீசர் இதோ!
queen movie teaser released
தனது திரையுலக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி, அரசியலில் பல்வேறு இன்னல்களை சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி, லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை இயக்குனர் விஜய் தலைவி என்ற படமாக எடுத்து வருகிறார்.
அவரை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்துள்ளார். எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் 26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைவாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. மேலும் டிசம்பர் 5-ம் தேதி குயின் வெப்சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் டீசரில் வெளிவந்துள்ளது.