பாடகி சின்மயின் வேட்புமனு தள்ளுபடி! நேரடியாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவரானார் பிரபல முன்னணி நடிகர்!
radharavi won in dubbing union election
திரைத்துறை மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதன் மூலம் பல சர்ச்சைக்கு உள்ளானார். சின்மயின் இந்த குற்றச்சாட்டிற்கு எதிராகவும், ஆதரவாகவுமே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் சின்மயியை டப்பிங் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் சின்மயி சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகவும், சந்தா செலுத்தவில்லை எனவும் கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தை நாடி போராடி சின்மயி மீண்டும் உறுப்பினரானார்.
இந்நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 15 அன்று நடைபெறவிருந்தது. இதில் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் பாடகி சின்மயி போட்டியிட்டார். அதற்காக அவர் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் சங்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு சின்மயி போட்டியிட முடியாது எனக்கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.