நடிகை ராதிகா நடத்திய கோலாகல பார்ட்டி! அட அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!
நடிகை ராதிகா நடத்திய கோலாகல பார்ட்டி! அட அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
பின்னர் சின்னத்திரையிலும் களமிறங்கிய அவர் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை ராதிகா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதிகா தன் நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.