என்னாச்சு?.. குழந்தையின் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்.. இப்படி ஒரு காரணமா?..! மனம் நெகிழவைக்கும் பின்னணி..!!
என்னாச்சு?.. குழந்தையின் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்.. இப்படி ஒரு காரணமா?..! மனம் நெகிழவைக்கும் பின்னணி..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம்வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனம் மூலமாக அனைவரையும் அசறவைப்பார். தனது அறக்கட்டளை குறித்து அறிக்கை ஒன்றை எழுதியிருந்தார். அதில், " முதலாவதாக, நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்து, எனது உடலை மாற்றிய சிவா மாஸ்டருக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு எப்போதும் வேண்டும்.
இரண்டாவதாக, அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன். இனி மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நான் ஏற்க முடிவுசெய்துள்ளேன்.
எனக்கு உங்கள் ஆசீர்வாதம் மட்டும்போதும். இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். "சேவையே கடவுள்" அன்புடன் ராகவா லாரன்ஸ்" என அறிக்கையில் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் எனது காலை விழக்கூடாது என்று கருதுகிறேன். மாற்றாக அவர்களின் காலில் நான் விழுந்து தான் எனது சேவையை செய்வேன்.
பொதுவாக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுந்து உதவி கேட்பதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். அந்த பணக்காரன் தங்களுக்கு உதவி செய்த பிறகும் அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்கிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் அதை பார்க்க விரும்பவில்லை.
எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இதற்கு காரணம். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு குடும்பத்தினர் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது, எனது காலில் விழ வந்தனர். அப்போது நான் விலகி சென்று உதவி தேவைப்படும் அந்த குழந்தையை பார்த்தேன், பெற்றோர் என் காலில் விழுந்தவுடன் உடனடியாக அந்த குழந்தை அழ தொடங்கியது.
அவர்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை எனது காலில் விழ வைக்கின்றனர். இது சரியானது அல்ல. நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்துதான் அவர்களின் ஆசியை பெறுவேன்.
எனது சிறிய ஈகோவும் அப்பொழுது மறந்து போனது. நாளை முதல் ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை எனக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆசிகளுக்கும் நன்றி. இதுதொடர்பான வீடியோவை விரைவில் வெளிவரும் "சேவையே கடவுள்" என்றென்றும் ராகவா லாரன்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.