படத்திற்காக எதையும் செய்ய தயார்.! வைரலாகும் சர்ச்சை வீடியோவிற்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!
ragul preeth singh controvarsy video
நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது. மேலும் அதனை தொடர்ந்து அவர் தற்போது வெளியான என்ஜிகே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி ஏராளமான திரைப்படங்களில் நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர்
தற்போது நாகர்ஜூனா நடித்து வெளியாகவுள்ள மன்மதுடு 2 என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரகுல் ப்ரீத் சிங் நான் கதைகேற்றபடி தான் நடிக்க முடியும், அதற்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்ய தயார் என கூறியுள்ளார்.