அடேங்கப்பா..என்ன ஒரு நெருக்கம்! தனது காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி.!
rai lakshmi post her lover photo
தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.
இப்படத்தைத் தொடர்ந்து அவர், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.. அதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி, தற்போது ஜெய்யுடன் நீயா-2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி, பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது வெளிநாட்டு காதலரின் புகைப்படத்தை த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது அளவுக்கு அதிகமான காதலையும், அன்பையும் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.