விருமன் பட மதுரை வீரன் பாடலை முதலில் பாடியது இவரா?? ஷங்கர் மகளுக்காக அதை தூக்கிட்டாங்களா.! பிரபலம் விளக்கம்!!
விருமன் பட மதுரை வீரன் பாடலை முதலில் பாடியது இவரா?? ஷங்கர் மகளுக்காக அதை தூக்கிட்டாங்களா.! பிரபலம் விளக்கம்!!
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விருமன்'. இப்படத்தில் ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் அதில் சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றது.
மேலும் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடலை ராஜலட்சுமிதான் பாடியுள்ளார். ஆனால் அதனை நீக்கிவிட்டு பின் அதிதி பாடியுள்ளார். மேலும் அந்த பாடல்களே வெளியானது. இந்த நிலையில் ஷங்கர் மகள் பாட வேண்டுமென்பதற்காக ராஜலட்சுமி பாடியதை தூக்கியதாக சர்ச்சைகள் கிளம்பியது.
ஆனால் இதுகுறித்து பாடகி ராஜலட்சுமி கூறுகையில், எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. பொதுவாக பலரையும் பாட வைத்து, அந்த பாடலுக்கு யார் சரியானவர்களோ அவர்களது குரலை தேர்வு செய்வது வழக்கமானதுதான். தனக்கு யுவன் சங்கர் இசையில் பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அதிதி மிகவும் நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார். எனது குரல் அந்த பாடலுக்கு செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை பாட வைத்திருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது மிகவும் நன்றாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.