அமெரிக்காவில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்த ராஜமௌலி.!
அமெரிக்காவில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்த ராஜமௌலி.!
உலக அளவில் புகழ்பெற்ற இந்திய இயக்குனர்களில் முதன்மையானவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டுக் கூத்து என்ற பாடல் கோல்டன் குளோப் விருதுகளை வென்றது. இந்தப் பாடல் தற்போது ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்று இருக்கிறது. மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் இந்தப் பாடலுக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடியதைப் போலவே உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியதை பார்த்து தான் வியந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னை வலதுசாரி ஆதரவாளராக சுட்டி காட்டுவதை மறுத்துள்ள ராஜமௌலி, பீம் படத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை பயன்படுத்தியதற்காக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எம்எல்ஏ தன்னை மிரட்டியதை நினைவு கூர்ந்தார்.
அந்தப் பத்திரிக்கையாளர்கள் தங்களின் வாசகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய 5 இந்திய படங்களை பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டதற்கு அவர் பண்டித் ஃகுயீன், ப்ளாக் ஃப்ரைடே, சங்கராபரணம், ஆடுகளம், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் ஆகிய திரைப்படங்களை பரிந்துரை செய்திருக்கிறார். மேலும், தனது திரைப்படமான 'ஈகா'வையும் பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார். இந்தப் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் திரைப்படம் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.