அனைவரும் முன்வந்து, உயிரை காப்பாத்துங்க! மிக உருக்கமாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி விடுத்த வேண்டுக்கோள்!
Rajamouli request to donate plasma
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருகிறது. மேலும் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளனர். மேலும் சிலர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு பிரம்மாண்ட பட இயக்குனரான ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் கடந்த மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். அப்பொழுது ராஜமௌலி கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு பிளாஸ்மா தானம் செய்ய காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜமௌலி பிளாஸ்மா தானம் குறித்து மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆன்டிபயாடீஸ் உருவாகிவிட்டதா என்று பரிசோதனை மேற்கொண்டேன். எனது ஐஜிஜி அளவு 8.62 தான் உள்ளது.15-க்கும் அதிகமாக இருந்தால்தான் பிளாஸ்மா தானம் கொடுக்க முடியும். அதனால் எனது பெரியண்ணனும், பைராவாவும் இன்று தானம் கொடுத்துள்ளார்கள்.
இந்த ஆன்டிபயாடீஸ் நம் உடலில் உருவாகி ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும். கொரோனா தொற்று குணமாகிய அனைவரும் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வாருங்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவராக மாறுங்கள் என்று ராஜமௌலி பதிவிட்டுள்ளார்