அட.. வேற லெவல்தான்.! தலைவர் 170 படம் குறித்து வெளிவந்த சூப்பர் அறிவிப்பு! இயக்குனர் யார்னு தெரியுமா?
அட.. வேற லெவல்தான்.! தலைவர் 170 படம் குறித்து வெளிவந்த அறிவிப்பு! இயக்குனர் யார்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரது 169 படமாகும். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினியின் 170வது படம் குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 170 ஆவது திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.