ரசிகர்களை குஷிப்படுத்த சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சி! குவியும் பார்வையாளர்கள்.
Rajini
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வயதானாலும் இன்று இளமையுடன் ரசிகர்களின் விருப்பத்திற்காக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது மட்டுமின்றி பல நடிகை, நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் இன்று வெளியவதாக இருந்த தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது படக்குழு.
எனவே ரசிகர்களை குஷிப்படுத்த முடிவு செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.