செம்ம மாஸாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் குறும்படம்.!வைரலாகும் வீடியோ.
Rajini act with short flim
தமிழ் சினிமாவில் 160க்கும் மேற்பட்ட படங்களிலும், பல வெற்றி படங்களையும் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் காணப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் எதிரொலியால் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பல சினிமா பிரபலங்களும் இணைந்து கொரோனா பற்றிய விழிப்புணர்வை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் தமிழில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் முதன் முறையாக நடித்துள்ளார்.