ரஜினி வீட்டில் கெட்டி மேளம்! கல்யாண தேதியும் சொல்லியாச்சு!
Rajini daughter soundarya second marriage date
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். மூத்தமகள் ஐஸ்வர்யா பிரபல தமிழ் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இளையமகன் சவுந்தர்யா அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சவுந்தர்யா, அஸ்வின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். சவுந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற 3D படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், விவாகரத்தான சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனுக்கும் விரைவில் திருமணம் என சில காலங்களாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகணும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டுள்து.