சந்திரமுகி 2வில் கதாநாயகனாக நடிக்க மறுத்த ரஜினி.. உண்மையை உடைத்த இயக்குனர் பி வாசு.?
சந்திரமுகி 2வில் கதாநாயகனாக நடிக்க மறுத்த ரஜினி.. உண்மையை உடைத்த இயக்குனர் பி வாசு.?
2005ம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர்ஹிட்டான படம் 'சந்திரமுகி'. இது மலையாளத்தில் வெளிவந்த 'மணிச்சித்திரத்தாள்' படத்தின் ரீமேக்காகும்.
சிவாஜி பிராடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு இப்படத்தை தயாரித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கவில்லை. வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் வாசு அளித்த பேட்டியில், "சந்திரமுகி 2 படத்திற்கு தூண்டியதே லதா ரஜினி தான். இவர் தான் வேட்டையன் கேரக்டரை டெவெலப் செய்ய சொன்னார். அதன்பிறகு ரஜினியுடன் கூட பேசி முடிவெடுத்துவிட்டோம்.
ஆனால், அப்போது ரஜினி, ஷங்கரின் எந்திரன் படத்திற்காக தொடர்ந்து 1 வருடத்திற்கு மேல் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதனால் தான் அப்போது சந்திரமுகி 2 தொடங்க முடியாமல் போனது. இல்லையென்றால் 13 வருடங்களுக்கு முன்பே சந்திரமுகி 2 வெளிவந்திருக்கும்" என்ற இயக்குனர் வாசு.