சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெற்றோருக்கு கிடைத்த பெருமையான விஷயம்! என்ன தெரியுமா?
Rajini fan made mani mandapam for rajini parents
தமிழ் சினிமா மட்டுமே இல்லாது இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சாதாரண பேருந்து நடத்துனராக இவர், இன்று இந்தியாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பல கோடி வசூல் செய்து சாதனை படைக்கின்றது.
தற்போது சினிமாவை தாண்டி அரசியலில் களமிறங்கியுள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோருக்கு ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் திருச்சியில் மணிமண்டபம் கட்டியுள்ளார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகியான இவர், திருச்சி அருகே குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில் ரஜினிகாந்தின் பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார்.
இந்த மணிமண்டபத்தை, ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று (25ம் திகதி) திறந்து வைத்து, பெற்றோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.