இதெல்லாம் ரஜினியால் மட்டும்தான்பா முடியும்! சொல்லி ஒரு வருஷம் ஆச்சு!
Rajini politics entry
தான் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தான் அரசியக்குக்கு வரப்போவதாகவும், அணைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை கேட்டு அவரின் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் கட்சி துவங்குவதாக கூறிய ரஜினி ஒரு வருடம் ஆகியும் இன்னும் கட்சி தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்கள் இடையே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரஜினிக்கு அரசியல் செய்வதற்கு ஆர்வம் இல்லை என்று மற்றொரு பக்கம் பேசப்படுகிறது. மேலும் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்ததில் இருந்துதான் ரஜினி படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ஒருவேளை பேட்ட பட வெற்றிவிழாவில் ரஜினி தனது அரசியல் கட்சி பற்றி பேச வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது.