×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா.? நடிகர் ரஜினிகாந்த மீண்டும் வெளியிட்ட முக்கிய அறிக்கை.!

என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது  உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்

ரஜினியின் அதிர்ச்சி அறிவிப்பால் போயஸ் கார்டன் வீட்டிற்கு முன் கூடிய ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரஜினி தனது அரசியல் முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டியும், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தியும் நேற்று ஜனவரி 10ம் தேதி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

நேற்று நடந்த போராட்டம் குறித்து தற்போது ரஜினிகாந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருக்கும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக ரஜினி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story