தலைவர் 171 படம் குறித்து அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்..
தலைவர் 171 படம் குறித்து அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மிகப்பெரும் ஹிட் திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக வலம் வருகிறார்.
இதன்படி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ' லியோ' இப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் 10 திரைப்படங்களை மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு சினிமாதுறையை விட்டு விலகி விடுவேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் ' லியோ ' திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படம் இயக்கப் போகிறார் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் இயக்கவிருக்கும் ' தலைவர் 171 ' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொடங்கப் போவதாக கூறியிருக்கிறார். இச்செய்தி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.