33 ஆண்டுகள் கடந்து... தரமான தெறி சம்பவம் லோடிங்.. ரஜினிகாந்த் - அமிதாப் கெட்டப்பை ரிலீஸ் செய்தது படக்குழு.!
33 ஆண்டுகள் கடந்து... தரமான தெறி சம்பவம் லோடிங்.. ரஜினிகாந்த் - அமிதாப் கெட்டப்பை ரிலீஸ் செய்தது படக்குழு.!
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில், லைகா ப்ரொடெக்சன் தயாரிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படம் தலைவர் 170.
கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் வைத்து படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அங்கு ரஜினிகாந்தும் - அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த 1985ல் வெளியான Geraftaar திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பின் Hum படத்தில் அமிதாப்-ரஜினிகாந்த் இணைந்து அடித்த நிலையில், அதன்பின் இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்காத நிலையில், தற்போது மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளனர்.