தனது மகள் திருமண வரவேற்பில் ரஜினி செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Rajinikanth dance at rajinikanth daughter second marriage
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவிற்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நாளை (பிப்.11) திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முக்கியமானவர்கள் மட்டுமே அழைக்கப்ட்டுள்ளனர்.
இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாகா நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் DJ நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'முத்து' படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
இதில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.