அரசியல் கேள்விகளை கேட்காதீங்க - டென்ஷனில் ரஜினிகாந்த்.!
அரசியல் கேள்விகளை கேட்காதீங்க - டென்ஷனில் ரஜினிகாந்த்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதிஹாசன் உட்பட பலரும் நடித்து வரும் திரைப்படம் கூலி. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தர் மேற்கொண்டு வருகிறார்.
கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளையும், பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளும் மேற்கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிப்பதால், படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அரசியல் கேள்வி வேண்டாம்
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "அரசியல் கேள்விகளை கேட்காதீங்க. கூலி படத்தின் 70 % படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக ஜனவரி 15ம் தேதிக்கு மேல் படப்பிடிப்பு தொடங்குகிறது" என பேசினார்.
தமிழகத்தில் பெண்கள் விவகாரத்தில் என செய்தியாளர் கேள்வியை எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என கூறி புறப்பட்டார்.
இதையும் படிங்க: Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!