அடேங்கப்பா.. செம ஜாலிதான் போல! அமீர் வீட்டில் ராஜூ செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!
அடேங்கப்பா.. செம ஜாலிதான்! அமீர் வீட்டில் ராஜூ செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், அண்மையில் முடிவுக்கு வந்தது. அதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அவர்களில் ராஜு பிக்பாஸ் டைட்டில் வென்று 50 லட்சத்தை தட்டிச் சென்றார்.
சினிமா துறையில் ஆரம்ப காலகட்டத்தில் கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராஜு இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர் தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தனது நண்பர்களை சந்திப்பது, சக போட்டியாளர்களை சந்திப்பது என மிகவும் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் ராஜு அண்மையில் தனது சக போட்டியாளரான அமீர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். மேலும் அவர்களுடன் தளபதி விஜய்யின் பாடலுக்கு நடனமாடி கொண்டாடியுள்ளார். அந்த ஜாலியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.