என்ன காம்போடா இது...? மிர்ச்சி சிவா உடன் இணைந்த இயக்குனர் ராம்! புதிய அப்டேட்.!
என்ன காம்போடா இது...? மிர்ச்சி சிவா உடன் இணைந்த இயக்குனர் ராம்! புதிய அப்டேட்.!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் ராம். கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தங்க மீன்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
சிறிது காலம் இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராம் சவரக்கத்தி மற்றும் சைக்கோ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இந்த
திரைப்படத்தில் நிவின் பாலி அஞ்சலி மற்றும் சூர்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையை வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் ராம். டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பு நடந்து இன்னும் இருபது நாட்களே மீதம் இருக்கின்றன. இத்திரைப்படத்தில் குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவா. இதுவரை ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவாவிற்கு இந்தத் திரைப்படம் ஒரு புதிய பரிணாமத்தை கொடுக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.