என் மீது செருப்பை வீசினார்கள்! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்! ஏன்னு பார்த்தீங்களா!!
என் மீது செருப்பை வீசினார்கள்! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்! ஏன்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது.
ரம்யா கிருஷ்ணன் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில் பாகுபலி படத்தில் அவர் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்பொழுது அவர், நான் பிரபல நடன கலைஞராக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். எனக்கு பெரிய பெயர் வாங்கித் தந்த திரைப்படம் படையப்பா. இதில் ரஜினிக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்றதும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். சௌந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவே ஆசைப்பட்டேன். ஆனால் விருப்பமே இல்லாமல் நடித்து முடித்தேன்.
படம் வெளியான முதல்நாள் என் தங்கை தியேட்டருக்கு சென்று படம் பார்த்தாள். அப்பொழுது ரஜினி ரசிகர்கள் திரையில் என்னை பார்த்ததும் செருப்பை கழற்றி வீசியுள்ளனர். அதை கேட்ட பிறகு அவ்வளவுதான் என் கேரியர் முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த பாராட்டை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். மேலும் இப்போதும் நிறைய நடிகைகள் நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனது கனவு என்று கூறுவதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.