வெசம்.. நிஷா வெளியேறியதால் கதறியழுத ரியோ மற்றும் அர்ச்சனா! சைலண்டாக ரம்யா பாண்டியன் செய்த வேலையை பார்த்தீர்களா!
நிஷா வெளியேறுவதால் ரியோ அழுதபோது ரம்யா பாண்டியன் நமட்டு சிரிப்பு சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த வாரம் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபில்லா, ரமேஷ், சோம் என 6 பேர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில், கமல் இந்த வாரம் இரண்டு எவிக்சன் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் அவரை தொடர்ந்து நேற்று நிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
நிஷா வெளியேறியதும் ரியோ மற்றும் அர்ச்சனா இருவரும் கண்கலங்கி அழுதனர். ரியோ நிஷாவை கட்டிப்பிடித்து அழுத போது ரம்யா பாண்டியன் பாலாஜியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். பாலாஜியும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் ரம்யாவை விஷம் என கமெண்டு செய்து வருகின்றனர்.