வாவ்.. சூர்யாவின் படத்தில் ரம்யா பாண்டியனுடன் இணையும் இளம் பிரபலம்! யார்னு பார்த்தீர்களா!!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யாவின் 2 -டி நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அரசில் மூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவருடன் வாணி போஜனும் நடிக்கவுள்ளார்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
ஆனாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யாவின் 2 -டி நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அரசில் மூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அவருடன் சீரியலில் இருந்து சினிமாவில் களமிறங்கி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வரும் வாணி போஜனும் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு பூஜை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.