என்னது! நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா! வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!
நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் பாண்டியன் ஆவார்.
தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அவர் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடந்து ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் காமெடி நடிகர் புகழ் அடித்த லூட்டி அனைவரையும் பெருமளவில் ரசிக்க வைத்தது. மேலும் அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார்.
இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் அவர் வெற்றியாளராவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
நடிகை ரம்யா பாண்டியனுடைய தந்தையின் சகோதரர்தான் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது சித்தப்பா என கூறி அருண்பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.