என்னது அவர் இல்லையா.. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இந்த நடிகரா! செம்ம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ப
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 5வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. பிக்பாஸ் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழைப்போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். பின்னர் 2வது சீசனை நானி மற்றும் 3, 4வது சீசனை நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மேலும் தெலுங்கு பிக்பாஸ் 5வது சீசனுக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முன்பு ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை எனவும், அவருக்கு பதில் நடிகர் ராணா தொகுத்து வழங்க அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு முன்பு ராணா 'நம்பர் 1 யாரி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.