தனது 16 வயதிலேயே இப்படி ஒரு செயலை செய்துள்ளாரா நடிகை ராஷி கண்ணா! வைரலாகும் பதிவு.
Rashi kanna childhood memories
தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா, விஜய் சேதுபதி, நயன்தாரா இவர்கள் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு மற்றும் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடித்த படங்கள் அந்த அளவிற்கு இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை எனவே தமிழில் அதிகப்படியான படவாய்ப்புகள் வரவில்லை. ஆனால் இவர் தற்போது தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கு நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனியார் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்த நடிகையிடம் அவரது சிறுவயது வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் நான் 16 வயது இருக்கும் போதே ஒரு பையனுடன் டேட்டிங் சென்றுள்ளேன் என கூறியுள்ளார்.
ஆனால் அதன் பிறகு அந்த காதல் தொடராமல் இருவரும் பிரித்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்கள் 16 வயதில் என்ன தெரியும் அப்பவே இப்படி செய்துள்ளாரே என கமெண்ட் செய்துள்ளனர்.